search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுன்ற தேர்தல்"

    பாஜக சார்பில் மால்டாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, மேற்கு வங்காளத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற தேர்தல் அமையும் என தெரிவித்தார். #BJP #AmitShah #ParliamentElection #TMC
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் மால்டாவில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளேன். இந்த தேர்தல் வங்காளத்துக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    மேற்கு வங்காளத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற தேர்தல் அமையும். இந்தத் தேர்தல், எதேச்சதிகாரமான திரிணாமுல் காங்கிரஸ் அரசு நிலைத்திருக்க வேண்டுமா அல்லது தூக்கி எறியப்பட வேண்டுமா என்பதை தீர்மானிப்பதாக இருக்க வேண்டும்.



    பாஜக நடத்தும் யாத்திரையை வேண்டுமானால் மம்தா பானர்ஜியால் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் மக்களின்  மனங்களில் இருந்து எங்களை நீக்க முடியாது.

    தற்போது இங்கு வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருகி விட்டன. ரவீந்திரநாத் தாகூரின் கீதங்கள் காற்றில் கலந்த வங்காளத்தில் இன்று வெடிகுண்டு புகை நாற்றம் கலந்துள்ளது.

    பாஜகவால் மட்டுமே மேற்கு வங்காளத்தின் பழைய மகிமையை மீண்டும் கொண்டுவர முடியும். நியாயமான ஆட்சியை மோடியால் மட்டுமே வழங்க முடியும்.

    சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மூலம் வங்காள மொழி பேசும் இந்து மக்கள் அனைவருக்கும் இந்தியாவில் தஞ்சம் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #BJP #AmitShah #ParliamentElection #TMC
    ×